Friday, December 23, 2016

                      


                            இந்தியா வல்லரசாகும்....

 நமது முன்னால்  இந்திய குடியரசு தலைவர்,   👊அதுவும்  தமிழர்👊 👉"Dr.APJ.KALAM"👈  கன்ட  கனவு, 2020 க்கு முன்பாகவே நிஜமாக போகிறது நனபர்களே !!!  அதேப்போல்  உலகத்தையே ஆள  இந்தியா வல்லரசாக போகிறது்.... தயார் ஆகுங்கள்  இளைஞ்கர்களே.., புதியதோர் இந்தியாவை உருவாக்குவோம்..,
பொதுநலன் கருதி வெளியீடுவர் "Essindia" இப்படிக்கு..,
'E'conomic 'S'olution'S'  'India.,
Essindia Means தமிழாக்கம்

                       👇 👇 இந்திய  பொருளாதாரத்தின்  தீர்வுகள்.,



மோடி ஜியின் அடுத்தடுத்து 5 அட்டாக்குகள் வரப்போகிறது அவை


1. தங்க கட்டுப்பாடு சட்டம்
தங்கம் சேமிப்பு வைத்திருந்தால் அதனை முறையாக வங்கிகளில் பதிவு செய்து ஆதார் எண்ணில் இணைத்து பின் அதனை பயன்படுத்தலாம் நகையாக அல்லாமல் பிஸ்கட்டாக, காசாக வைத்திருந்தால் அதனை வங்கியில் இருப்பு வைத்து ஆதார் விவரத்தில் பதிந்து ஈட்டுறுதிப் பத்திரமாக மட்டுமே வைத்துக் கொள்ளலாம் மேலும் புதிதாக தங்கம் வாங்கினால் தங்கள் ஆதார் விவரங்களுடன் பெறலாம்  இதனால் தங்கமாக பதுக்குவது இயலாது போகும் மேலும் தங்கத்தின் விலை 70% வீழ்ச்சி அடையும்

2. நில உடைமைதாரர் உரிமை புதிப்பிப்புத் திட்டம்
நிலப்பத்திரங்கள் அனைத்தையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் கொடுத்து அதற்கு புதிய பதிவெண்ணுடன் கூடிய பத்திரம் பெறலாம் இது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் இதனால் நில மோசடி செய்வதும் பினாமி சொத்து சேர்ப்பதும் தடுக்கப்படும்

3. வாகன உரிமை மீள்பதிவுத் திட்டம்

இயக்குநிலையில் உள்ள வாகனங்கள் அனைத்திற்ரும் நுண்ணுனர்வு கருவி பொருத்தப்படும் இதன் விவரம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் பயன் திருட்டு, தவறான நடவடிக்கைக் வாகனம் பயன்படுத்துவது தங்கப் படும் மேலும் சாலை விதிமீறலுக்கும், விபத்துகளுக்கும் நேரடி கண்காணிப்பு மூலம் அபராதம் பெறப்படும்

4. அந்நிய பொருள் பண்டமாற்றுத் திட்டம்
இந்திய பொருள்களுக்கு மாற்றாகவே அந்நிய பொருள் கொள்முதல் செய்யப்படும் பணப்பரிமாற்றம் குறையும்

5. இந்திய நுண்ணோக்கு பாதுகாப்புத் திட்டம்
 இந்தியாவை கிழக்கு - மேற்காகவும், வடக்கு - தெற்காகவும் கண்காணிக்க 36 சாட்டிலைட் விடப்பட்டுள்ளது இதனால் தங்கம், போதை மருந்து, வெடிமருந்து கண்காணிக்கப்பட்டு கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெய் மோடி சர்க்கார்
பாரத மாதா கீ ஜெய்


சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா? 


 சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்*..  நாம் பொதுவாக எப்பொழுதும் காலை  தொங்கவைத்து அதிகமாக  அமர்ந்திருக்கிறோம்...  இரண்டு சக்கர  வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில்,& சோபாக்களில்,  கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படிக்  காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது*..;இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து  அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது... *நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு  அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு& வாய்ப்பு உள்ளது.  நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.  மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது  ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது.  எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால்  அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.& ;எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை& மடக்கி அமர்ந்துதான்  சாப்பிட வேண்டும். ;ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு& ;ஜீரணம்  நன்றாக நடைபெறுகிறது.&  ;சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல்  காலுக்கே அதிகமாக செல்கிறது. இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்  யுரோப்பியன் கழிவறையில்  அமரும் பொழுது குடலுக்கு அதிக& அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட  யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு விஷயத்தைப்  புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து  வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*. எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்... எனவே யுரோப்பியன்  வகை கழிவறைகளை தவிருங்கள்... கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்... சாப்பிடும் பொழுது தரையில்  ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால்& சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்... சில வீடுகளில் அதற்கு  வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...*சாப்பிடும் முறை*...!& .நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க... 2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக  மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...& 4. சாப்பிடும் பொழுது  இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.  போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்... 5. அவசர  அவசரமாக சாப்பிட வேண்டாம்... 6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட  வேண்டாம்... 8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்... 9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்... 10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்... 11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு  சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்... 12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள் 13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்... 14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்... *அமருங்கள் சம்மணமிட்டு*...*சாப்பிடுங்கள் முறையாக*...*வாழுங்கள் ஆரோக்கியமாக* ====================================================

         

நவம்பர் 11 தேசிய கல்வி நாள் 

(National Education Day)
இந்தியாவில்ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின்பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 15 ஆகத்து 1947 முதல் 2 பிப்ரவரி 1958 வரை இவர் கல்வி அமைச்சாராகப் பணியாற்றினார்.



 11-Nov-16 20:17:24
11.11. 1918 : முதலாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்த தினம் இன்று!


1914-ஆம் ஆண்டு தொடங்கி, நான்கு வருடங்களாக நடந்து வந்த முதலாம் உலக யுத்தமானது 1918 ஆம் வருடம், 11-ஆவது மாதம், 11-ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.

அன்று காலை ஐந்து மணி அளவில், ஜெர்மனி போதிய ஆள்பலம் மற்றும் யுத்த தளவாடங்கள், உணவுப்பொருட்கள் என எல்லாமே தீர்ந்து போன நிலையில்,  பிரான்சில் உள்ள கோம்பேய்ன் என்ற இடத்தில் நேச நாடுகளிடம் ஆயுத ஒப்படைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த மஹா யுத்தத்தில் மரணமடைந்த போர் வீரர்களின் எண்ணிக்கை 90 லட்சமாகும். மேலும் 2.10 கோடி பேர் காயமடைந்தனர். ஜெர்மனி, ரஷ்யா,ஆஸ்திரியா, ஹங்கேரி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அனைத்து நாடுகளிலும் ஏறக்குறைய தலா பத்து லட்சம் பேர் மாண்டனர்.

இவை தவிர நோய், பசி, பஞ்சம், பட்டினி போன்ற காரணங்களால் மரணம் அடைந்த பொது மக்களின் எண்ணிக்கை 50 லட்சமாகும்.


துபாய் -அபுதாபி இடையே விரைவில் உலகின் அதிவேக ஹைப்பர்லூப் பயணம்


துபாயிலிருந்து அபுதாபி செல்ல ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஆகும். ஆனால் வரும் 2020 முதல் துபாய் -அபுதாபி பயணம் வெறும் 12 நிமிடங்களில் சாத்தியமாகும் என்று தெரிகிறது. இந்த உலகின் அதிவேக பயணத்துக்கான மல்டி-பில்லியன் டாலர் பெறுமானமுள்ள போக்குவரத்து தொழில்நுட்பத்தை கட்டமைக்கும் முயற்சியில் துபாய் இறங்கியிருக்கிறது.


அணுசக்தி துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-ஜப்பான் இடையே ஒப்பந்தம்


பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்.  அணுசக்தி துறையில் இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுளள்து.பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சின் ஷே அபே முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


நவம்பர் 12 உலக நுரையீரல் அழற்சி நாள்


உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) என்பது நுரையீரல் அழற்சிநோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் ஆண்டு தோறும் நவம்பர் 12 ஆம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வரும்ஒரு சிறப்பு நாள் ஆகும். சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் முதலாவது உலக நுரையீரல் அழற்சி நாளை கொண்டாடின. 2010 முதல் இது நவம்பர் 12 ஆம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

நியூமோனியா நோய்

உலகளாவிய அளவில் நியூமோனியா நோய் தாக்கத்தால் ஆண்டுக்கு சராசரியாக 1.6 மில்லியன் பேர் இறக்கின்றனர். 5 வயதிற்கும் குறைந்த 155 மில்லியன் குழந்தைகள் பாதிப்படைகின்றனர். இது எயிட்சு, மலேரியா, எலும்புருக்கி நோய் போன்றவற்றினால் இறப்பு ஏற்படுவதை விட அதிகம் என மருத்துவ சங்க குறிப்பு தெரிவிக்கின்றது.

நியூமோனியா, நுரையீரல், தொற்று மூளை சவ்வு பாதிப்பு, ரத்தத்தில் நோய் கிருமிகள் கலப்பு, காதில் நோய் பாதிப்பு, சைனஸைடிஸ் போன்ற வகை கொண்டது. பச்சிளம் குழந்தை, குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இருக்கும் வளர்ச்சியடையாத நுரையீரல், குறுகிய மூச்சுக்குழல், ஊட்டச்சத்து பற்றாக்குறை, வளர்ச்சியடையாத நோய் எதிர்ப்பு மண்டலம் போன்ற காரணங்களால், இத்தகைய தொற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவச் செய்தி கூறுகின்றது.

12.11.1946: பண்டிட் மதன் மோகன் மாளவியா நினைவு தினம் இன்று!

மதன் மோகன் மாளவியா உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் டிசம்பர் 25, 1861 அன்று பிரிஜ்நாத், மூனாதேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது மூதாதையர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மால்வா என்ற பகுதியைச் சேர்ந்தவர்களாதலால் மாள்வியாக்கள் என்று அழைக்கப்பட்டனர்.

மாளவியா ஐந்து வயதிலேயே சமஸ்கிருதம் கற்கத் தொடங்கினார். அலகாபாத் சில்லா பள்ளியில் படிக்கும்போதே கவிதைகள் எழதி பள்ளி இதழ்களிலும் வார இதழ்களிலும் வெளியிட்டார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சமசுகிருதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அலகாபாத் சில்லா பள்ளியில் ஓர் ஆசிரியராகத் தம் பணி வாழ்வைத் தொடங்கினார். பின்னர் அலகாபாத்தில் சட்டப் படிப்பை முடித்தார். தமது சட்டத்துறையில் பணிவாழ்வை 1891இல் அலகாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கினார். பின்னர் 1893ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொடர்ந்தார்.

அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்ட பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் கட்சித்தலைவராக 1909, 1918, 1930 மற்றும் 1932 ஆகிய ஆண்டுகளில் பொறுப்பேற்றார்.

இன்று நாட்டின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தை 1916இல் அன்னி பெசண்ட் அம்மையார்   துணையுடன் நிறுவினார்

இந்திய சுதந்தர போராட்டத்தில் பங்கேற்று, பல்வேறு வகைகளில் பணிபுரிந்த மாளவியா நவம்பர் 12, 1946ஆம் அன்று மரணமடைந்தார்.

மதன் மோகன் மாளவியா இறந்து 68 ஆண்டுகளுக்கு  பின்னர் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான  'பாரத் ரத்னா' விருது அவருக்கு வழங்கப்பட்டது. 30.03.2015 அன்று மாளவியாவின் வாரிசுகள் இவ்விருதைப் பெற்றுக்கொண்டனர்.


No comments:

Post a Comment